இந்தியா

டிசிஎஸ்-ஐ அடுத்து 8000 ஊழியர்களை பணியில் அமர்த்தும் பிரபல நிறுவனம்.. ஃபிரஷர்களுக்கு அரிய வாய்ப்பு!

Published

on

உலகம் முழுவதும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் மிகவும் அரிதாக ஒரு சில நிறுவனங்களில் மட்டுமே புதிதாக ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் டிசிஎஸ் நிறுவனம் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்கப் போவதாக அறிவித்த நிலையில் தற்போது விப்ரோ நிறுவனமும் சுமார் 8000 புதியவர்களை வேலைக்கு அமத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக படித்து முடித்து வெளியே வரும் ஃபிரஷர்களுக்கு அரிய வாய்ப்பு என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை ஒன்றான விப்ரோ 8000 பணியாளர்களை புதியதாக நியமனம் செய்ய இருப்பதாக சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. புதிதாக வேலைக்கு அமத்துபவர்கள் புதிதாக படித்து முடித்த பட்டதாரிகளாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக வேலைகள் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் Careers.wipro.com என்ற இணையதளத்தில் வெளியாக்ம் அறிவிப்பை பார்த்து அதன் பின் விண்ணப்பிக்கலாம் என விப்ரோ நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணியை மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் என்ற டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்குள் 1.25 லட்சம் ஊழியர்களை பணியமர்த்த இருப்பதாக அறிவித்தது. இதன் காரணமாக படித்து முடித்து வெளியே வரும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இந்த நிலையில் தற்போது விப்ரோ நிறுவனமும் 8000 ஊழியர்களை பணியில் அமர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வெளியான விப்ரோ நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டில் 30.5 பில்லியன் லாபம் கிடைத்துள்ளதாக அறிவித்ததை அடுத்து மேலும் நிறுவனத்தின் வளர்ச்சியை பெறுக்க புதிய ஊழியர்களை எடுக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த காலாண்டில் ஊழியர்களை புதிய ஊழியர்களை தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இனிவரும் ஆண்டுகளில் அதிக வெற்றி பெறவும், லாப விகிதங்களை பெருக்க திட்டமிட்டுள்ளதாகவும் விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் தியரி டெலாபோர்ட் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version