உலகம்

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் விப்ரோ.. எத்தனை ஊழியர்கள் தெரியுமா?

Published

on

உலகின் முன்னணி நிறுவனங்களிடம் இருந்து வேலை நீக்க அறிவிப்பு என்பது தினசரி செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் ஒவ்வொரு நாளும் உலகின் ஒரு சில நிறுவனங்களின் வேலை நீக்க அறிவிப்பு வெளிவந்து கொண்டிருப்பதால் ஊழியர்கள் மத்தியில் நிம்மதி இல்லாத வேலை என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.

ஏற்கனவே கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் அந்த ஊழியர்களுக்கே இன்னும் வேறு வேலை கிடைக்காத நிலையில் தற்போது மீண்டும் மீண்டும் வேலை நீக்க அறிவிப்பு வெளியாகி கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனமும் 120 ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இருகுறித்து ஐடி நிறுவனமான விப்ரோ குறியபோது வணிக தேவைகளின் மறுசீரமைப்பு காரணமாக அமெரிக்காவின் புளோரிடோ மாநிலத்தில் உள்ள 120 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக புளோரிடோ மாநிலத்தில் உள்ள கிளையில் மட்டுமே வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் மற்ற கிளைகளில் வேலை நீக்கம் செய்யப்படவில்லை என்பது விப்ரோ ஊழியர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் செயலாக்க முகவர்கள் என்றும் மீதி உள்ளவர்கள் குழு தலைவர்கள் மற்றும் ஒரு குழு மேலாளர் என்றும் கூறப்படுகிறது. விப்ரோ பிராந்தியத்தில் ஆழ்ந்த அர்பணிப்புடன் வேலை செய்து வந்தோம் என்றும் தற்போது திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டது தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த மாத தொடக்கத்தில் நியூஜெர்சியின் கிழக்கு பகுதியில் அமெரிக்காவின் தலைமையிடம்த்தை தொடக்க இருப்பதாக விப்ரோ நிறுவனம் தெரிவித்த நிலையில் தற்போது திடீரென வேலை நீக்க நடவடிக்கை குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்தியாவில் உள்ள விப்ரோ கிளைகளில் சுமார் 400 ஊழியர்கள் கடந்த ஜனவரி மாதம் வேலைநீக்கம் செய்யப்பட்டனர் என்பதும் இதற்கு மோசமான செயல் திறன் காரணம் என்று காரணம் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகரித்து வரும் வேலை நீக்கம் காரணமாக அனைத்து நாடுகளிலும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version