ஆரோக்கியம்

குளிர் காலத்தில் நம் ஆரோக்கியத்தை பராமரிக்க சிம்பிள் டிப்ஸ்!

Published

on

Winter Season Health Tips: இதோ… மழைக்காலம் சற்று தணிந்து குளிர் காலம் தொடங்கிவிட்டது. வீட்டில் எதில் கைவைத்தாலும், அண்டார்டிக் குளிரை நாம் உணர்ந்து கொண்டிருக்கிறோம்.

சரி… இந்த குளிர் காலத்தில் நம் உடல்நலத்தை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதை இங்கே பார்க்கலாம். இது அட்வைஸ் இல்லீங்க.. டிப்ஸ்!

உடற்பயிற்சி

பொதுவாக குளிர் காலத்தில் தான் பலருக்கும் தசைகள் இறுகும். மூட்டு வலி, தசை வலிகள் போன்றவை ஏற்படும். குறிப்பாக வயதானோருக்கும், உடலில் முன்பு எங்கேயாவது அடிப்பட்டவர்களுக்கும் இந்த வலிகள் ஏற்படும். ஒரே காரணம், குளிர் காலம் என்பதால்.

இதற்கு உடற்பயிற்சி ஒன்றே ஒரே தீர்வு. கிரவுண்ட் எக்ஸர்சைஸ் என்று சொல்வார்கள் அல்லவா… அதை கூகுளில் நீங்கள் காணலாம். அதுபோன்ற பயிற்சிகளை நீங்கள் தினமும் மேற்கொள்ள வேண்டும். சரியான உணவுப்பழக்கம் மற்றும் தேவையான அளவு தூக்கம் மிக அவசியமாகும்.

அடிக்கடி கைக்கழுவுதல்

தொற்று நோய் ஏற்படுதல், பரவுதலைத் தடுக்க கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். கோடை காலத்தை விட, குளிர் காலத்தில் இந்த பழக்கம் மிக மிக அவசியமாகும். ஏனெனில், குளிரான இடங்களில் தான் கிருமிகள் அபாரமாக வளரும்.

பழங்கள், காய்கறிகள்

முடிந்தளவு குளிர் காலத்தில் அசைவ உணவுகளை அவாய்ட் செய்வது சாலச் சிறந்தது. (சண்டைக்கு வந்துடாதீங்க!). ஏனெனில், செரிமாணச் சிக்கல் தொடங்கி, நோய் பரப்புதல் வரை அசைவ உணவுகளால் பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

ஆகவே காய்கறிகளை நமது டாப் உணவுகள் லிஸ்டில் வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக, குளிர் காலத்தில் நாம் அதிகம் வீட்டில் தான் நேரம் செலவிடுவோம். எனவே உடலில் கலோரிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஸோ, கொழுப்புச் சத்து, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம்.

Trending

Exit mobile version