சினிமா செய்திகள்
மனைவியை கிண்டல் செய்த தொகுப்பாளர்: பளாரென கன்னத்தில் அறைந்த வில்ஸ்மித்!
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மனைவியை கிண்டல் செய்த தொகுப்பாளரை மேடையில் நடிகர் வில் ஸ்மித் பளார் என கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை தொகுத்து வழங்கிய கிரிஸ் ராக் என்பவர் பேச்சுவாக்கில் வில் ஸ்மித் மனைவியை கிண்டல் செய்தார். வில் ஸ்மித் மனைவி சமீபத்தில் ஏற்பட்ட தொற்று நோய் காரணமாக தலை முடி இல்லாமல் மொட்டையாக இருந்ததைப் பார்த்து கிண்டல் தொகுப்பாளர் கிறிஸ் ராக் கிண்டல் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த வில்ஸ்மித் தொகுப்பாளரை திட்டினார்.
இந்த நிலையில் சிறந்த நடிகருக்கான விருது ‘கிங் ரிச்சர்ட்’ என்ற படத்திற்காக வில்ஸ்மித்க்கு வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த விருதை வாங்க மேடைக்கு வந்த வில் ஸ்மித், அருகிலிருந்த பொறுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் பளாரென்று அறைந்தார்
இந்த வீடியோவை இணையதளங்களில் வைரலாகி வந்தாலும், ஆஸ்கர் விருதை பெறும் போது கண்ணீர் மல்க அந்த விருதை வில்ஸ்மித் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது
#WILLSMITH #CHRISROCK : STICKER pic.twitter.com/9zCw70wJGu
— ari | MOVED (@DAYDREAMLJN) March 28, 2022