சினிமா
தமிழ் ராக்கர்ஸுக்கு சவால் விடுமா சர்கார்?
சர்கார் படத்தை இணையதளங்களில் வெளியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று சன் நெட்வொர்க் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. அம்மனுவில், 3 ஆயிரத்து 710 இணையத்தளங்களின் பெயர்களை குறிப்பிட்டு, காப்புரிமையை மீறி இந்த இணையதளங்களில் சர்கார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த இணையதளங்களை முடக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ண குமார், 3715 இணையதளங்களுக்கு தடை விதித்ததோடு படத்தை இணையதளங்களில் வெளியிட நிரந்தர தடை விதித்தும் உத்தரவிட்டார்.
இணையதளங்கள் சர்கார் திரைப்படத்தை வெளியிடுவது காப்புரிமை சட்டத்துக்கு எதிரானது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் வெளியாகும் தமிழ் படங்கள் வெளியான முதல் நாளன்றே இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.