சினிமா செய்திகள்

அலாவுதீன் பூதத்துக்கும் விஜய்சேதுபதி வாய்ஸ் கொடுப்பாரா?

Published

on

மார்வெல் சினிமாஸ் தயாரிப்பில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் உலகளவில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது. ஆனால், தமிழில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் பெரிய வசூலை ஈட்டவில்லை. இதற்கு முதல் காரணம் மட்டுமின்றி முழுக் காரணமும் அயன்மேனுக்கு விஜய்சேதுபதி வாய்ஸ் கொடுத்தது தான்.

அயன்மேனின் இறப்பை உலகம் முழுவதும் ரசிகர்கள் சோகத்துடன் பார்த்து வரும் நிலையில், நம்ம ஊரில் அயன்மேன் பேச ஆரம்பித்தாலே தியேட்டரில் ரசிகர்கள் டென்ஷன் ஆகி விடுகின்றனர்.

இந்நிலையில், டிஸ்னி தயாரிப்பில் வரும் மே 24ம் தேதி வெளியாகவுள்ள அலாதீன் படத்தில் அலாவுதீன் மந்திர விளக்கை தேய்த்தால் வரும் ஜீனியாக பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடித்துள்ளார். அவருக்கும் விஜய்சேதுபதி வாய்ஸ் கொடுத்து டிஸ்னி படத்தையும் ஓடவிடாமல் விஜய்சேதுபதி செய்ய வேண்டும் என மார்வெல் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் ஹிந்தி வெர்ஷனுக்கு பாலிவுட் நடிகர் அர்மான் மாலிக் குரல் கொடுத்துள்ளார். தமிழ் வெர்ஷனுக்கு டப்பிங் டீமே குரல் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version