தமிழ்நாடு

‘திமுக கொடுக்கலைனா கமல் கூட போய்டுவீங்களா?’- நிருபர் கேள்விக்கு வைகோவின் ‘நச்’ பதில்

Published

on

தமிழக சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி இடையில் தான் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான மூன்றாவது அணி அமையவும் வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.

அதைத் தவிர்த்து நாம் தமிழர் கட்சி, அமமுக போன்ற கட்சிகளும் தேர்தலில் குறிப்பிடத்தக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணியைப் பொறுத்தவரை விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர சிறிய கட்சிகளுக்கு ஒன்றிரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதைத் தவிர்த்து காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக தொகுதிகள் ஒதுக்காமல் இழுத்தடித்து வருகிறது திமுக. இதனால் சில கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகி, கமலுடன் இணைய வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே திமுக கூட்டணியில் அங்கம் வகித்த இந்திய ஜனநாயக கட்சி, கமல் அணிக்குத் தாவியது. அதைப் போலவே அதிமுக கூட்டணியில் இருந்த சமக, கமலுடன் ஐக்கியமானது. இந்நிலையில் வைகோ தலைமையிலான மதிமுகவும் கமலுடன் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இது பற்றி நிருபர்கள் சந்திப்பில், ஒரு பத்திரிகையாளர், ‘திமுக கேட்கும் தொகுதிகளை கொடுக்கவில்லை என்றால் மய்யம் பக்கம் போவீர்களா?’ எனக் கேட்டார். அதற்கு வைகோ, ‘வாய்ப்பே இல்லை’ என்று ஒற்றை பதிலை சொல்லிவிட்டு நடையைக் கட்டினார்.

 

Trending

Exit mobile version