இந்தியா

பாஜக அரசையே கவிழ்ப்பேன்: சுப்பிரமணியன் சுவாமி அதிரடி!

Published

on

உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பாஜக அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தால் பாஜகவையே கவிழ்ப்பேன் என பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை பாஜக உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழகம் ஒன்றில் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மத்திய பாஜக மற்றும் உத்திரபிரதேச அரசுகள் தனக்கு எதிர்க்கட்சிகள் என குறிப்பிட்டார். இந்த இரண்டு அரசுக்கும் என்னை எதிர்க்க தைரியம் இருக்கிறதா? அப்படி எதிர்த்தால் அவர்களின் ஆட்சியையே கவிழ்த்துவிடுவேன் என்றார்.

மேலும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு எனக்கு தெரிந்த முஸ்லீம்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. முகலாய ஆட்சியாளர் பாபர் காலத்தில் பறிக்கப்பட்ட இந்துக்களின் நிலம் தான் அந்த நிலம் என சன்னி வக்பு வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது. ராமர் கோவில் அமைய உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் பாஜக அரசையே கவிழ்ப்பேன் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

seithichurul

Trending

Exit mobile version