தமிழ்நாடு

தமிழ்நாட்டிற்கு மட்டும் நீட் விலக்கா?- அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில்

Published

on

தமிழ்நாட்டிற்கு மட்டும் நீட் நுழைவுத் தேர்வு விலக்கு அளிக்கப்படுமா என்பது குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில் அளித்து உள்ளார்.

வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்து உள்ளது.

இது குறித்து ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘2021 ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வானது வருகின்ற செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நடைபெறும். கொரோனா கட்டுப்பாடுகள் கொண்டு இந்த தேர்வு நடத்தப்படும். என்.டி.ஏ இணையதளங்கள் மூலம் இந்த நீட் தேர்வை எழுதுவதற்கான பதிவு முறை நாளை மாலை 5 மணி முதல் ஆரம்பிக்கப்படும்.

சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும் என்னும் நோக்கில் நீட் தேர்வு நடத்தப்படும் நகரங்கள் 155 இலிருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதேபோல தேர்வு நடத்தும் மையங்கள் 3,862 இலிருந்து அதிகரிக்கப்படும்.

கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளைப் பின்பற்றி நீட் தேர்வு எழுத வரும் அனைத்து மாணவர்களுக்கும் முகக் கவசம் தரப்படும். தேர்வு மையத்துக்கு நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும். தொடர்பில்லா பதிவு முறை பின்பற்றப்படும். மேலும் கிருமிநாசினி பயன்படுத்துதல், சமூக இடைவெளி உள்ளிட்டவைகளும் பின்பற்றபடும்’ என்று தெரிவித்து உள்ளார்.

திமுக ஆட்சியில் வந்ததிலிருந்து தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விளக்கு வாங்கப்படும் என்று தெரிவித்து வருகிறது. அதனால் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு நடக்குமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இது பற்றி அமைச்சர் சுப்ரமணியன், ‘ஒன்றிய அரசின் சார்பில் நீட் தேர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழக அரசைப் பொறுத்தவரையில் நீட் தேர்வு விலக்குப் பெற வேண்டும் என்பது தான் நிலைப்பாடு. நிச்சயம் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு நீட் விலக்கு குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பார்’ என்று கூறியுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version