இந்தியா

வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா? மாதச் சம்பளதாரர்களிடையே எதிர்பார்ப்பு!

Published

on

ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது மிகவும் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா என்பதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த எட்டு ஆண்டுகளாக மாதச் சம்பளதாரர்களுக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பு இரண்டரை லட்ச ரூபாயாக இருந்து வரும் நிலையில் அதை உயர்த்த வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கூட வருமான வரி விலக்கு உச்சவரம்பு 3 லட்சமாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதே நிலை தொடர்வதால் தொடர்ந்து மாதச் சம்பளதாரர்கள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட்டிலாவது மூன்று லட்சம் அல்லது ஐந்து லட்சம் என வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 5 லட்சம் உயர்த்துவதற்கு வாய்ப்பு இல்லை என்றாலும் குறைந்தபட்சம் 3 லட்சம் அல்லது 4 லட்சத்திற்கு என உச்சவரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பு இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். கோடிக்கணக்கில் வருமானம் பார்க்கும் தொழிலதிபர்கள் பலர் வருமான வரி கட்டாமல் ஏமாற்றி கொண்டிருக்கும் நிலையில் மாதச் சம்பளதாரர்கள் அனைவரும் ஒழுங்காக வரி கட்டும் நிலையில் இருப்பதால் அவர்களுக்கான வரி உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version