சினிமா

புதுப்பேட்டை 2 அடுத்தாண்டு இறுதியில் தொடங்குகிறதா?

Published

on

அடுத்தடுத்து கைவசம் நிறைய படங்களை குவித்து வரும் தனுஷ், அண்ணன் செல்வராகவனுடன் ஒரு படத்தில் இணையவுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படம் மாபெரும் வசூலை ஈட்டியுள்ளது. இதனை தொடர்ந்து, தனுஷ் ஒரு சரித்திர படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் பணிகள் நிறைவடைந்தவுடன், ராட்சசன் பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அடுத்ததாக வெற்றிமாறனுடன் இணையும் தனுஷ், அடுத்த ஆண்டு இறுதியில், அண்ணன் செல்வராகவன் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடசென்னை வெற்றி பெற்றதால், தனுஷின் ஆல்டைம் ஃபேவரைட் படமான புதுப்பேட்டை பார்ட் 2வாக அந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version