செய்திகள்

நீட் தேர்வு பாடத்திட்டம் மாற்றமா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

Published

on

நீட் தேர்வு மற்றும் ஜே.இ.இ நுழைவுத் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் குறித்து  தேசிய தேர்வு முகமை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

நடப்பு ஆண்டில் பொறியியல், மருத்துவம் படிப்பதற்கான ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வுகளில் பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்திருக்கிறது. இந்தத் தேர்வுகளைத்  தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜே.இ.இ தேர்வு பாடத்திட்டங்கள் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் இருக்கும். முன்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 90 கேள்விகள் பதில் அளித்தார்கள் . ஆனால் இப்போது 75 கேள்விகளுக்கு விடை அளித்தால் போதும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இயற்பியல், வேதியியல், கணித பிரிவில் கேட்கப்படும் 90 கேள்விகளில் தலா 25 வீதம் 75 கேள்விக்கு விடை அளிக்கலாம். கடந்த ஆண்டு நடந்த தேர்வில், கேட்கப்பட்ட 75 கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும் என இருந்தது. இந்த ஆண்டு நீட் தேர்வு வினாத்தாள் அமைப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

பல்வேறு மாநிலங்களில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் ஜே.இ.இ தேர்வு போல் கேள்வித்தாள் அமையக்கூடும் என்று என்.டி.ஏ. தெரிவித்துள்ளது. ஜே.இ.இ தேர்வானது அடுத்த மாதம் 23 முதல் 26 வரை நடைபெறக் கூடும் . 2 ஆம் கட்ட தேர்வானது மார்ச் 15 முதல் 18 வரையிலும்; 3ம் கட்ட தேர்வு ஏப்ரல் 27 முதல் 30 வரையிலும்; இறுதிக்கட்ட தேர்வு மே 24 முதல் 28 வரை நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்வுகளுக்கு பல மாதங்களாகவே மாணவர்கள் தயாராகி வரக்கூடிய சூழலில் தற்போது பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை என தேசிய தேர்வு முகமை ஆணையம் அறிவித்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version