சினிமா

2.O திரைப்படம் தமிழ்ராக்கர்ஸில் வெளியாகுமா?

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் லைகா நிறுவன தயாரிப்பில் நடித்த 2.O இன்று திரைக்கு வந்தது. இந்த படம் திருட்டுத்தனமாக தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியாகாமல் இருக்க நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

பொதுவாக அனைத்து படங்களையும் பாரபட்சம் பார்க்காமல் படம் வெளியான அன்றே தங்கள் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டு திரையுலகினருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து வருகிறது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். சில படங்களை திரைக்கு வரும் முன்னரே வெளியிட்டு அட்டூழியம் செய்து வருகிறது இந்த இணையதளம்.

பூனைக்கு யார் மணி கட்டுவது போல பல முயற்சிகள் மேற்கொண்டு தமிழ்ராக்கர்ஸை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் 500 கோடி செலவில் உருவாகியுள்ள 2.O படமும் தமிழ் ராக்கர்ஸில் வந்துவிடுமோ என்ற பீதியில் படக்குழுவினர் இருந்தனர். இந்நிலையில் 2.0 படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் பதிவிடுவதை தடுக்கும் வகையில் தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட 3000 இணையதளங்களை முடக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் புதிதாக வேறு இணையதளத்தை தொடங்கி அதில் 2.O படத்தை வெளியிடுகிறார்களா என்பதையும் படக்குழு கண்காணித்து வருகிறது. அதே நேரத்தில் ஏர்டெல், வோடஃபோன், ஜியோ, ஐடியோ, பிஎஸ்என்எல் போன்ற நெட்வொர்க்குகள் மூலம் இணையத்தில் 2.0 படத்தை பதிவிறக்கம் செய்வதை தடை செய்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version