தமிழ்நாடு
இதுதான் நல்ல வாய்ப்பு.. இனியாவது ஸ்டாலின் அதிரடி காட்டுவாரா?
சென்னை: தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் முக்கிய நடவடிக்கை எதாவது எடுப்பரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஹைகோர்ட் தீர்ப்பில் 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்த தடையில்லை என்று நீதிபதி கூறியுள்ளார். மேலும் சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் தடையில்லை என்று தீர்ப்பளித்து இருக்கிறார்.
இந்த நிலையில்தான் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அது அதிமுகவிற்கு எதிராக கூட செல்ல வாய்ய்ப்புள்ளது என்கிறார்கள்.
அதிமுகவில் உள்ள, அதிமுக எதிர்ப்பு எம்எல்ஏக்கள், ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். .
இதற்கு சட்டசபையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும். ஸ்டாலின் தலைமையில் மட்டுமே இது சாத்தியமாகும். அதிமுகவிற்கு எதிரான நபர்களை எல்லாம் ஒருங்கிணைக்க வேண்டும். முக்கியமாக அதிமுகவிலேயே இருக்கும் அதிமுக எதிர்ப்பு எம்எல்ஏக்கள் குறைந்த பட்சம் 4 பேரையாவது நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அதிமுகவிற்கு எதிராக வாக்களிக்க வைக்க வேண்டும்.