இந்தியா

தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல்காந்தி ராஜினாமா செய்வாரா?

Published

on

17-வது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. இதில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் பாஜகவே தனித்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது.

பாஜக கூட்டணி இதுவரை 345 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது காங்கிரஸ் கூட்டணி 92 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 105 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி தனித்து 52 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த தோல்வி தொண்டர்களை சோர்வடைய வைத்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைமையகத்தில் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாட்டு மக்கள் தங்கள் முடிவை தெளிவாகத் தெரிவித்துள்ளார்கள். மக்கள்தான் முடிவெடுப்பார்கள் என்றேன். அதுதான் நடந்துள்ளது. மோடிக்கும், பாஜகவுக்கும் எனது வாழ்த்துகள். எது தவறாக போனது என்பதை விவாதிக்க வேண்டிய நேரம் இது இல்லை.

அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி ராணியிடம் ராகுல் காந்தி பின்னடைவைச் சந்தித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பிய கேள்விக்கு, என்னை தோற்கடித்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணிக்கு எனது வாழ்த்துகள் என்றார். தொடர்ந்து தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல், அதை காங்கிரஸ் காரியக் கமிட்டி முடிவு செய்யும் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version