தமிழ்நாடு

ராகுல்காந்தி தமிழகத்தில் போட்டி: கே.எஸ்.அழகிரி கோரிக்கை!

Published

on

மக்களவை தேர்தல் சூடுபிடித்துள்ளதையொட்டி எங்கு திரும்பினாலும் தேர்தல் குறித்தான செய்திதான். தமிழகத்தில் அதிமுக, திமுக தலைமையில் இரண்டு கூட்டணிகள் அமைந்துள்ளது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி சில தினங்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூட்டணி கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்ய தமிழகம் வந்தார். ராகுலின் தமிழக வருகை நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ராகுல்காந்தி தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஏதாவது ஒரு மக்களவை தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும். மக்களின் வேண்டுகோளை ஏற்று ராகுல் தமிழகத்தில் ஏதாவது ஒருபகுதியில் போட்டியிடுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அதே போல காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணியும் ராகுல்காந்தி தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என ராகுல் காந்திக்கு டுவிட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.

ராகுல்காந்தி ஏற்கனவே உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்னதாக ராகுல் காந்தி இந்தமுறை இரண்டு தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. அவர் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடலாம் என கூறப்பட்டது. ஆனால் அது வதந்தியாகவே இருந்தது. ஆனால் இந்தமுறை தமிழக காங்கிரஸ் தலைவரே ராகுல் காந்திக்கு தமிழகத்தில் போட்டியிட அழைப்பு விடுத்திருக்கிறார்.

seithichurul

Trending

Exit mobile version