இந்தியா

உத்தரபிரதேச முதல்வர் ஆவாரா பிரியங்கா காந்தி? கருத்துக்கணிப்பில் ஆச்சரிய தகவல்!

Published

on

உத்தரபிரதேச மாநிலத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக காங்கிரஸ் கட்சி உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆட்சியை இழந்து பல வருடங்கள் ஆனதை அடுத்து மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக களம் இறங்கியுள்ளது என்பதும் குறிப்பாக பிரியங்கா காந்தி முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் டைம்ஸ் நவ் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணி 239 முதல் 245 தொகுதிகள் வரை வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 325 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாஜகவுக்கு அடுத்தபடியாக சமாஜ்வாதி கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என்றும் அந்த கட்சிக்கு 125 தொகுதி வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மூன்றாவதாக பகுஜன் சமாஜ் கட்சி உத்தரப்பிரதேச மாநிலத்தில் 30 தொகுதிகளை கைப்பற்றும் என்று இந்த கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது.

பிரியங்கா காந்தி களமிறங்கியும் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 7 தொகுதிகளில் வெற்றி கிடைத்த நிலையில் இந்த தேர்தலில் 5 முதல் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. இதன்மூலம் பிரியங்கா காந்தி முதல்வராக வாய்ப்பே இல்லை என்பது இந்த கருத்து கணிப்பு மூலம் தெரிகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தை பொறுத்தவரை முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு செல்வாக்கு சற்றும் குறையவில்லை என்றும் குறிப்பாக மதமாற்ற தடை சட்டத்தை அவர் அமல்படுத்தியது பெரும்பாலான மக்களுக்கு திருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை அமையும் என்றும் கருத்துக் கணிப்பில் இருந்து தெரியவருகிறது.

seithichurul

Trending

Exit mobile version