சினிமா செய்திகள்

பொங்கலுக்கு பிறகாவது ரிலீசாகுமா சர்வம் தாளமயம்?

Published

on

ராஜீவ் மேனன் இயக்கியுள்ள சர்வம் தாளமயம் படத்தின் ரிலீஸ் ஜனவரி இறுதிக்கு தள்ளிப் போயுள்ளது.

கிறிஸ்துவ இளைஞன் கர்நாடக சங்கீதத்தில் தேர்வாகிறானா இல்லையா என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பீட்டராக ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களுமே வைரலாகி வருகின்றன. விஜய் ரசிகர்களுக்கு இந்த படத்தில் பிரத்யேக பாடலே உள்ளது.

டிசம்பர் 21ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட இந்த படம் பெரிய படங்களின் போட்டியால் ஜனவரி 25ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Trending

Exit mobile version