இந்தியா

‘தடுப்பூசி போடுறதா இருந்தா மொதல்ல மோடிக்கு போடுங்க..’ காங்கிரஸ் காட்டம்

Published

on

கோவிஷில்டு தடுப்பூசிக்கு மத்திய மருந்துகள் கட்டுப்பட்டு மையம் அனுமதி அளித்துள்ள நிலையில், மற்ற உலக தலைவர்களை போல் பிரதமர் மோடியும் தனக்கு முதலில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கூறியுள்ளார்.

மத்திய மருந்துகள் கட்டுப்பட்டு மையம் நேற்று இரண்டு தடுப்பூசி தயாரிப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வரைமுறை அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன்படி, ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பிற்கு ஒப்புதல் அளிப்பதாகவும், இதே போல், ஐசிஎம்ஆர் மற்றும் புனேயில் உள்ள வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பு மருந்து தயாரிப்பிற்கு ஒப்புதல் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கூறுகையில், தடுப்பூசி சோதனையானது 3வது கட்ட ஆய்வே மடியாத நிலையில், அந்தத் தடுப்பூசி பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். இதே போல், காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அஜித் ஷர்மா கூறுகையில், மற்ற உலக தலைவர்களைப் போல் பிரதமர் மோடியும், முதல் தடுப்பூசியை அவருக்கே போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

 

Trending

Exit mobile version