தமிழ்நாடு

ரூ.100-ஐ நெருங்கும் பெட்ரோல் விலை – தமிழகத்தில் குறைய வாய்ப்பா?- அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

Published

on

நாட்டில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதேபோல டீசல் விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலின் உற்பத்தி விலையானது அதற்கு விதிக்கப்படும் விலையில் மூன்றில் ஒரு பங்கு தான் என்றும், மீதம் இருப்பது மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரிகளே என்றும் சொல்லப்படுகிறது. இப்படி மத்திய – மாநில அரசுகள் போடும் வரிகளை குறைக்க முன் வர வேண்டும் என்று பல தரப்பு மக்களும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம், ‘இப்போதைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியைக் குறைக்க எந்த வித திட்டமும் இல்லை’ என்று திட்ட வட்டமாக கூறியுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் வரவுள்ளதால் மாநில அரசு வரிக் குறைப்பு செய்ய வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘பிரதமர் நரேந்திர மோடியை சமீபத்தில் முதல்வர் பழனிசாமி சந்திக்கும் போது கூட, பெட்ரோலின் விலைக் குறைப்பின் அவசியத்தை உணர்த்தினார். நாங்களும் தொடர்ந்து மத்திய அரசுக்கு இது குறித்து தெரியப்படுத்தி வருகிறோம். இது குறித்து விரைவில் ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்னும் நம்பிக்கை எங்களுக்கு உள்ளது’ என்று கூறியுள்ளார்.

 

Trending

Exit mobile version