தமிழ்நாடு

கொரோனா குறைந்தாலும் ஸ்டெர்லைட் ஆலை இயக்கப்படும்: மா.சுப்ரமணியன்

Published

on

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்தாலும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயக்கப்படும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்தி ஆலை, பல்வேறு மக்கள் போராட்டங்களுக்குப் பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இழுத்து மூடப்பட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் நீதிமன்றத்தை அணுகி தொடர்ந்து சட்டப் போராட்டம் நடந்து வருகிறது. தூத்துக்குடியில் சுகாதாரத்தைக் கெடுக்கும் வகையில் ஸ்டெர்லைட் ஆலை செயல்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்ததை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் இயக்கத் தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்தது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை குறித்து அமைச்சர் சுப்ரமணியன், ‘நேற்று கூட தமிழ்நாட்டில் 3,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இப்படி இருக்கையில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து தொடர்ந்து ஆக்சிஜன் சப்ளை நமக்கு வந்து கொண்டிருக்கிறது.

முதலில் இரண்டாவது அலை முற்றிலும் குறையட்டும். மேலும் மூன்றாவது அலை வேறு வருமென்று சொல்கிறார்கள். அது குறித்தும் தெளிவான புரிதல் கிடைக்கும் போது ஸ்டெர்லைட் ஆலை குறித்து முடிவெடுக்கப்படும்’ என்றுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version