சினிமா செய்திகள்

அவெஞ்சர்ஸ் படத்தில் நிவேதா பெத்துராஜ் நடிக்க போகிறாரா?

Published

on

அடியே அழகே என ஒருநாள் கூத்து படத்தில் அறிமுகமான நிவேதா பெத்துராஜுக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாம். மேலும், அது விரைவில் நனவாகக் கூடிய வாய்ப்பும் அவருக்கு கிடைக்கப்போகிறதாம். அதுவும் பிரம்மாண்ட ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸ் படத்தில்.

டிக்டிக்டிக், திமிருபுடிச்சவன் படங்களின் வெற்றியை தொடர்ந்து, பிரபுதேவாவுடன் பொன்மாணிக்கவேல், வெங்கட்பிரபுவின் பார்ட்டி மற்றும் விஜய்சேதுபதியுடன் விஜய்சந்தர் இயக்கும் புதுப்படம் என பிசியாக உள்ளார்

இந்நிலையில், இந்த தமிழ் பெண்ணின் நீண்ட நாள் கனவான ஹாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்ற ஆசை கூடிய விரைவில் நிறைவேறப்போவதாக தெரிவித்துள்ளார்.

அதுவும் அவெஞ்சர்ஸ் படத்தின் அடுத்த பாகத்திலாம். அதற்கான ஆடிஷன் ஹாலிவுட்டில் அடுத்த மாதம் ஏப்ரலில் நடைபெறவுள்ளதாகவும் நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.

அப்போ அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் அடுத்தும் அவெஞ்சர்ஸ் பாகம் வரப்போகிறதா? என்ற புதிய கேள்வியும் இதன்மூலம் எழுந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version