தமிழ்நாடு

மன்னிப்பு கேட்பாரா முருகதாஸ்: நெருக்கும் தமிழக அரசு!

Published

on

நடிகர் விஜய் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்த சர்கார் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படம் நிகழ்கால அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் தமிழகம் முழுவதும் சலசலப்பை உருவாக்கியது. குறிப்பாக அதிமுகவினரையும், ஆளும் தரப்பையும் ரொம்பவே இந்த படம் கொந்தளிக்க வைத்தது.

தமிழக அரசையும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவசத் திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், வில்லி கதாப்பாத்திரத்துக்கு ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி என வைத்ததாகவும் எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர் அதை நீக்கக் கோரித் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் முழுவதும் போராட்டம் நடத்தினர்.

இந்த வழக்கில் காவல்துறை தன்னை எந்தநேரமும் கைது செய்யலாம் என்பதால் இயக்குநர் முருகதாஸ் கடந்த 9-ஆம் தேதி முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து நவம்பர் 27-ஆம் தேதி வரை முருகதாஸை கைது செய்ய இடைக்கால உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம். இந்நிலையில் நேற்று மீண்டு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகினார்.

சர்கார் படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் மேலும் எதிர்காலத்தில் அவர் எடுக்கும் படங்களில் அரசின் திட்டங்களையும், அரசையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்க மாட்டேன் என்று உத்தரவாதப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அரசு தரப்பில் கோரிக்கை வைத்தார் அவர்.

இதனையடுத்து இது தொடர்பாக முருகதாஸிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிப்போம் என அவரது வழக்கறிஞர் கூறியதை அடுத்து வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version