சினிமா

கீர்த்தி சுரேஷின் திடீர் ஆசை நிறைவேறுமா?

Published

on

தமிழ், தெலுங்கு, மலையாளம் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் கீர்த்தி சுரேஷின் புதிய ஆசை தல அஜித்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது தானாம்.

தமிழில் விஜய்யுடன் இரண்டு படங்களிலும், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயனுடம் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் விரைவில் அஜித்துடன் நடிக்க திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறார். விஸ்வாசம் படத்திற்கு அஜித் நடிக்கவுள்ள புதிய படத்தில் எப்படியாவது ஒப்பந்தமாகிவிட வேண்டும் என்பதே கீர்த்தி சுரேஷின் ஒரே நோக்கமாக உள்ளது. புதிய படங்களை தற்போது தேர்வு செய்யாமல் இருப்பதும் அஜித் படத்தில் ஒப்பந்தமாகவே என அவருக்கு நெருங்கிய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

கீர்த்தி சுரேஷின் இந்த திடீர் ஆசையை அஜித் நிறைவேற்றி வைப்பாரா என்பது விரைவில் தெரிந்துவிடும். அஜித் அடுத்ததாக பின்க் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியே கிடையாது என்பதால், கீர்த்தி சுரேஷின் ஆசை எப்போது நிறைவேறும் என்பதும் குழப்பமாகவே உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version