தமிழ்நாடு

மத்திய அமைச்சராகிறாரா எச்.ராஜா?

Published

on

சமீபத்தில் பதவியேற்ற மோடி அமைச்சரவையில் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. இதனையடுத்து பின்னர் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும், அது அதிமுகவோ அல்லது பாஜகவை சார்ந்தவர்களாகவோ இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பாஜக சார்பாக சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த எச்.ராஜாவுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு பாஜக தலைமையிடம் கேட்டுகொண்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் பாஜக தலைமை தமிழக பாஜக மீது கடும் கோபத்தில் இருப்பதால் எச்.ராஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்தியா முழுவதும் பாஜக மிகப்பெரிய பெற்றது. ஆனால் தமிழகத்தில் போட்டியிட்ட ஐந்து தொகுதிகளிலும் பாஜக படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் பாஜக கூட்டணியும் படுதோல்வியை சந்தித்தது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றார். இதன் காரணமாக தமிழக பாஜக மீது தேசிய பாஜக கடும் கோபத்தில் இருப்பதாகவும் இதனால் எச்.ராஜாவுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பது சந்தேகம் தான் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version