தமிழ்நாடு

மய்யம் வென்றால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம்: கமல் அதிரடி

Published

on

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இன்று காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். பிரச்சாரத்துக்கு நடுவில் அவர் செய்தியாளர்களை சந்தித்து, வரும் தேர்தலில் மய்யம் வெற்றி பெற்றால் செயல்படுத்தப் போகும் 7 அம்ச திட்டம் குறித்து விளக்கினார்.

அதில் ஒரு திட்டம்தான் ‘இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுக்கும் திட்டம்’. பத்திரிகையாளர்கள் மத்தியில் கமல் பேசும்போது, ‘இந்த 7 அம்ச திட்டத்தில், தமிழகத்தில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுக்கும் திட்டம் செயல்படுத்தபடும் என்று நாங்கள் சொன்னால், அதை கிண்டல் செய்கிறார்கள். இதை மய்யத்தின் அரசு அமைந்தால் செய்து காட்டுவோம்.

இந்தத் திட்டத்திற்கு எங்கிருந்து நிதி வரும் என்று எங்களைக் கேள்வி கேட்கிறார்கள். நாங்கள் கட்டமைக்கும் ஊழலற்ற நேர்மையான அரசில் மக்களுக்கு நலத்திடங்களை செய்ய போதுமான நிதி கிடைக்கும். மக்களுக்கு செலவு செய்யாமல் எதற்காக அரசு நிதி. எல்லாவற்றுக்கும் ஊழலற்ற நேர்மையான அரசுதான் அடித்தளம். அந்த அடித்தளம் அமைந்துவிட்டால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுக்கும் திட்டம் உட்பட அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்திவிட முடியும். காரணம், இந்த அனைத்துத் திட்டங்களும் ஒன்றோடு ஒன்று பிணைந்தது ஆகும்’ என்று கூறினார்.

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுக்கப்படும் என்கிற அறிவிப்பு மட்டுமே கமலால் வெளியிடப்பட்டதே தவிர, அது எப்படி அமல் செய்யப்படும் என்பது குறித்த விரிவான விளக்கம் அளிக்கப்படவில்லை.

‘இல்லத்தரசிகளுக்கு ஊதியம்’ எதற்காக..?- மய்யம் விளக்கம்

https://seithichurul.com/news/tamilnadu/homemakers-will-get-salary-in-maiam-govt-says-kamal-haasan/30609/

 

 

 

 

Trending

Exit mobile version