தமிழ்நாடு

நடிப்புக்கு டாட்டா சொல்லுவேன்- கமல் பளீச்!

Published

on

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அரசியலுக்கு இடையூறாக இருந்தால் சினிமாவில் நடிப்பதை முடித்துக் கொள்வேன் என்று தெரிவித்துள்ளார். 

கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்திக்கிறார். மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வளரவில்லை என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் கமல் உட்பட மய்யத்தின் முக்கிய பிரமுகர்கள் சிலர் வெற்றி பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தன் எதிர்கால அரசியல் வாழ்க்கைத் திட்டங்கள் பற்றி கமல் கூறுகையில், ‘நான் நடிப்பது என் தொழில். அதை நான் தொடர்ந்து செய்வேன். இப்போது எனக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. முடிந்தால் இன்னும் அதிக சம்பளம் வாங்கிக் கொண்டு தொடர்ந்து நடிப்பேன். அதே நேரத்தில் என் அரசியல் வாழ்க்கைக்கு நடிப்பு குறுக்கே வந்தால் கண்டிப்பாக அதை தூக்கி தூர வைத்துவிட்டு விடுவேன். 

எம்.ஜி.ஆர் அவர்கள், தன் பெயருக்குப் பின்னால் எம்.எல்.ஏ என்று போட்டுக் கொண்டு பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். அப்படி இருக்கையில் நான் நடிப்பதை இங்கே சிலர் குறை கூற தகுதியில்லை’ என்று தெரிவித்துள்ளார். 

seithichurul

Trending

Exit mobile version