சினிமா செய்திகள்

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் இணைகின்றாரா தனுஷ்?

Published

on

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தில் தனுஷ் இணைய இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ரஷ்யா செல்ல இருப்பதாகவும் அதற்கு உரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படம் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தில் தனுஷ் ஒரு பாடலை எழுதி, பாட இருப்பதாக தகவல்கள் வெளி வந்திருக்கிறது.

ஏற்கனவே தனுஷ் தனது படத்தில் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் படத்திற்கும் பாடல்கள் எழுதி பாடியுள்ளார் என்ற வகையில் தற்போது முதல் முதலாக விஜய் படத்திற்கும் பாடல் எழுதி பாட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடும் என்றும் கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல் முதலாக விஜய் மற்றும் தனுஷ் இணைவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version