சினிமா செய்திகள்

ஒரே நாளில் மோத போகும் ஜி.வி. பிரகாஷின் இரண்டு படங்கள்!

Published

on

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 100% காதல் படமும் சிவப்பு மஞ்சள் பச்சை படமும் ஒரே நாளில் வெளியாகும் என கூறப்படுகிறது.

ஐங்கரன், 4ஜி, அடங்காதே, ஜெயில், 100% காதல், சிவப்பு மஞ்சள் பச்சை என கை நிறைய படங்கள் வைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷின் சில படங்கள் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்காக தயாராகி வருகிறது.

இந்நிலையில் 100% காதல் படம் செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் இயக்குனர் சசி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சித்தார்த் இருவரும் சேர்ந்து நடித்துள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படமும் 100% காதல் வெளியாகும் நாளான செப்டம்பர் 6 அன்றே வெளியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.வி. பிரகாஷின் இரு படங்களும் ஒரே நாளில் வெளியாவதால், இரு படங்களின் தயாரிப்பு நிறுவனங்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இரு படங்களும் ஒரே நாளில் வெளியானால், பிசினஸ் பாதிக்கும் சிக்கல்கள் வரும் என்றும் கோலிவுட்டில் ஒரே பேச்சாக பேசப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version