இந்தியா

ஆக்சிஜன் இல்லாமல் மூச்சுத்திணறிய கணவர்: வாயோடு வாய் வைத்து சுவாசத்தை பரிமாறிய மனைவி!

Published

on

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மூச்சு திணறிய கணவருக்கு வாயோடு வாய் வைத்து சுவாசத்தை பரிமாறிய மனைவியின் முயற்சி தோல்வியடைந்து, அவரது கணவர் பரிதாபமாக பலியான சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்து வருவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ரவி சிங்கேல் என்பவர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல் நிலை மோசம் அடைந்ததை அடுத்து அவருக்கு ஆக்சிஜன் ஏற்ற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லை என்பதால் மருத்துவர்கள் கைவிரித்தனர். இதனை அடுத்து தனது கணவனை காப்பாற்ற மனைவி ரேணு சிங்கெல் கணவரின் வாயோடு வாய் வைத்து சுவாசத்தை பரிமாறினார். ஆனால் அவரது முயற்சி தோல்வியடைந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து அந்த மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் கூறும்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் எங்களால் முடிந்த அளவு ஆக்ஸிஜன் இருப்பை அதிகப்படுத்த முயற்சி செய்கிறோம். ஆனால் சில சமயம் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து விடுகிறது என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version