கிரிக்கெட்

WIvBAN – வங்க சிங்கங்களை அதன் குகையிலே வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்!- டெஸ்ட் தொடரை ஒயிட்-வாஷ் செய்தது

Published

on

வெஸ்ட் இண்டீஸ் – வங்க தேசம் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நேற்று நடந்து முடிந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒயிட் வாஷ் செய்துள்ளது வெஸ்ட் இண்டீஸ். வலுவான வங்க தேச கிரிக்கெட் அணியை, அதன் சொந்த மண்ணிலேயே இரண்டாம் நிலை அணியை வைத்துக் கொண்டு வெஸ்ட் இண்டீஸ் வென்று காட்டியது பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

குறிப்பாக தாக்காவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்க தேசத்தை, வெறும் 17 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள். முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு 395 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை எட்டி வரலாற்றுச் சாதனை படைத்தது வெஸ்ட் இண்டீஸ். இதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்டிலும் இன்னொரு சாதனையை நிகழ்த்தி கெத்துக் காட்டியுள்ளது. 2012 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆசிய கண்டத்தில் வெற்றி பெறும் முதல் டெஸ்ட் தொடர் இதுவேயாகும்.

இரண்டாவது டெஸ்டில் பிரமாதமாக பந்து வீசிய, வெஸ்ட் இண்டீஸின் சுழற் பந்து வீச்சாளர் ரகீம் கோர்வாலுக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் நிகுர்மா போனருக்கு தொடர் நாயகன் விருது கொடுக்கப்பட்டது. இந்தத் தொடரில் அணியைத் திறம்பட வழி நடத்தியதற்காக வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரெய்க் பிராத்வெய்டுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

 

Trending

Exit mobile version