தமிழ்நாடு

6 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது ஏன்? திருமாவளவன் பேட்டி

Published

on

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் என முடிவு செய்யப்பட்டு சற்று முன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த நிலையில் 6 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டது ஏன் என்பது குறித்து செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசிய போது ’தமிழகத்தை சூழ்ந்திருக்கும் சனாதன பேராபத்தை எதிர்க்க வேண்டும் என்றும் தமிழகம் புதுச்சேரியை குறிவைத்து பாஜக சதி வேலைகளை செய்கிறது என்றும் அந்த சதிகளை முறியடிக்கவே குறைந்த தொகுதிகளை பெற்று கொண்டு திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் பாஜக சங் பரிவார் அமைப்புகளால் காலூன்ற முடியாது என்றும் 6 தொகுதிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் இடையே அதிருப்தி, எதிர்ப்பு எழுந்தது என்றாலும் எதிர்கால அரசியலை கருதி திமுக அணியில் தொடர்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் நலன் கருதியே 6 தொகுதிகளை ஏற்றுக்கொண்டு இருக்கிறோம் என்றும் மதச்சார்பற்ற சக்திகளின் வாக்குகள் எந்த நிலையிலும் சிதறி விடக்கூடாது என்பதால் குறைந்த அளவு தொகுதிக்கு ஒப்புக் கொண்டோம் என்றும் கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் ஆறு தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version