தமிழ்நாடு

4 மணி நேரமாக காத்திருக்கிறேன், வெற்றி அறிவிப்பு தாமதம் ஏன்? விஜயபாஸ்கர்

Published

on

நான்குமணி நேரமாக வெற்றி அறிவிப்புக்காக காத்திருக்கிறேன் என்றும் ஆனால் இன்னும் எனது வெற்றி குறித்த அறிவிப்பு வெளிவரவில்லை என்றும் இந்த தாமதம் ஏன் என்றும் சி.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்

விஜய பாஸ்கர் விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டார் என்ற நிலையில் அவரது வெற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த தொகுதியின் முடிவை இன்னும் தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் விராலிமலை தொகுதியில் எனது வெற்றியை அறிவிப்பதில் தாமதம் என்றும் வாக்கு எண்ணிக்கை தொடங்கி 24 மணி நேரத்தை கடந்து விட்டது என்றும் விஜயபாஸ்கர் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் 23 சுற்று முடிந்து விட்டது என்றும் 4 மணி நேரமாக வெற்றி அறிவிப்புக்காக காத்திருக்கிறோம் என்றும் அவர் தனது விரக்தியை வெளியிட்டுள்ளார். விராலிமலை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி 23 சுற்றுகள் முடிந்து விட்டது என்பதும் இருப்பினும் முடிவை இன்னும் அறிவிக்காமல் இருக்கும் தேர்தல் ஆணையம் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விராலிமலை தொகுதியில் விஜயபாஸ்கர் 71,831 வாக்குகளும், திமுகவின் பழனியப்பன் 53,175 வாக்குகளும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version