தமிழ்நாடு

தமிழக பாஜக தலைவர்: வானதிக்கு எதிராக சதி செய்தாரா பெண் தலைவர்?

Published

on

தமிழக பாஜகவின் புதிய தலைவர் வானதி சீனிவாசன் தான் என கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் கடைசி நேரத்தில் பெண் தலைவர் ஒருவர் அவரது பெயரை எடுத்துவிட்டு அண்ணாமலை பெயரை டிக் செய்ததாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்த எல் முருகன் சமீபத்தில் மத்திய அமைச்சர் ஆனதை அடுத்து புதிய பாஜக தலைவராக யாரை தேர்வு செய்யலாம் என பாஜக தலைமை ஆலோசனையில் இருந்தது. நயினார் நாகேந்திரன் ஏற்கனவே தமிழக சட்டசபை பாஜகவின் தலைவராக இருப்பதால் அவரது பெயர் முதலிலேயே நிராகரிக்கப்பட்டது. அதன் பின்னர் பொன் ராதாகிருஷ்ணன், இல கணேசன் உள்ளிட்டோர் பெயரும் பரிசீலிக்கபட்டதாகவும் ஆனால் வயது காரணமாக அவர்கள் பெயரும் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஆகிய இருவரது பெயர்தான் கடைசியில் இருந்ததாகவும் அதில் வானதிக்கே பெரும்பாலான தலைவர்கள் ஆதரவு கொடுத்ததால் அவர் தான் தலைவர் என கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ஒரு முக்கிய பெண் தலைவர் வானதி பெயரை எடுத்துதுவிட்டு அண்ணாமலை பெயரை டிக் செய்ததால், அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கட்சியில் சேர்ந்த உடனே துணைத்தலைவர், 11 மாதத்தில் தலைவர் என அண்ணாமலையின் ஹைஜம்ப் குறித்து சீனியர் தலைவர்கள் பொருமிக் கொண்டிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. ஆனால் அதேநேரத்தில் அண்ணாமலை சுறுசுறுப்பானவர் என்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பதாலும் கட்சியை திறம்பட நடத்தி செல்வார் என்று பாஜக தலைமை கருதுகிறது.

பாஜக தலைமையின் நம்பிக்கையை அண்ணாமலை காப்பாற்றுவாரா? தமிழகத்தில் பாஜகவை திறம்பட வழிநடத்தி செல்வாரா? ஆளுங்கட்சியாக ஆக்குவாரா? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version