தமிழ்நாடு

உதயநிதியின் பெயர் அமைச்சர் பட்டியலில் இல்லாததற்கு இதுதான் காரணமா?

Published

on

சற்று முன்னர் தமிழக அமைச்சரவை பட்டியலில் வெளிவந்தது என்பதும் அந்த பட்டியலில் முக ஸ்டாலின் உள்பட 34 அமைச்சர்களின் பெயர்கள் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாற்றுக் கட்சியில் இருந்து வந்த செந்தில் பாலாஜிக்கு கூட அமைச்சரவை பட்டியலில் இடம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் உதயநிதியின் பெயர் அமைச்சரவையில் இடம் பெறாமல் இருந்தது அவரது ஆதரவாளர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

ஆனால் இதுகுறித்து அதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் வாரிசு அரசியல் என்ற கெட்ட பெயர் வரும் என்றும் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் அந்த கெட்ட பெயரை முக ஸ்டாலின் பெற விரும்பாததால் தற்போது உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் எம்எல்ஏ என்பது மக்களால் தேர்வு செய்யப்பட்ட பதவி, ஆனால் அமைச்சர் பதவி என்பது முதலமைச்சரே முடிவு செய்து கொடுக்கும் பதவி என்பதால் இப்போதைக்கு வாரிசு அரசியல் வேண்டாம் என்று அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ஐந்து வருடங்கள் உதயநிதி எம்எல்ஏவாக அனுபவம் பெற்ற பின்னர் அடுத்து ஆட்சிக்கு வரும்போது அவரது பெயர் அமைச்சரவை பட்டியில் இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் இன்னும் ஓரிரு வருடங்களில் உதயநிதி ஸ்டாலின் அரசியல் அனுபவம் பெற்ற பின் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version