வணிகம்

உங்கள் எஸ்பிஐ வங்கி கணக்கில் ரூ.147.5 பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா? என்ன காரணம்?

Published

on

எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி அண்மையில் தனது வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கிலிருந்து 147.5 ரூபாய் பிடித்தம் செய்துள்ளதாக அறிவித்து இருந்தது.

இது எதற்கு பிடித்தம் செய்யப்பட்டது என பலருக்கும் குழப்பம் இருக்கும். வங்கி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு அவற்றின் அம்சத்தைப் பொருத்து வருடாந்திர பராமரிப்பு கட்டணங்களை வசூலிக்கின்றன.

 

அப்படி தான் எஸ்பிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய கிளாசிக், சில்வர், காண்டாக்ட்லஸ் மற்றும் குலோபிள் டெபிட் கார்டுகளுக்கு வருடாந்திர பராமரிப்பு கட்டணமாக 125 ரூபாய் மற்றும் அதற்கான 18 சதவீத ஜிஎஸ்டி 22.5 ரூபாய் என மொத்தமாக 147.5 ரூபாயை பிடித்தம் செய்துள்ளது.

மேலும் உங்கள் எஸ்பிஐ டெபிட் கார்டை நீங்கள் மற்ற விரும்பினால் 300 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

எஸ்பிஐ வங்கி மட்டுமல்ல, எல்லா வங்கிகளும் தங்களது வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் டெபிட் கார்டுகளுக்கு அதன் சேவைகள், அம்சங்களைப் பொருத்து வருடாந்திர பராமரிப்பு கட்டணம் வசூலிக்கின்றன.

seithichurul

Trending

Exit mobile version