தமிழ்நாடு

மக்கள் மன்றத்தை ரஜினி கலைத்ததன் பின்னணியில் இந்த இரண்டு காரணங்களா?

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டதாக அறிவித்து இருந்தார் என்பதும் அது மட்டுமின்றி இனி அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை உறுதி செய்வதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும் ரஜினி ரசிகர் மன்றம் வழக்கம்போல் நடைபெறும் என்றும் மக்கள் நலப் பணிகளில் ஈடுபடும் என்றும் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் முதல் வேலையாக ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்ததற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது ரஜினிகாந்த் வட்டாரங்களிலிருந்து இரண்டு முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளன.

அவற்றில் ஒன்று உள்ளாட்சி தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தை பயன்படுத்தி சிலர் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அவர்களுக்கு சில அரசியல் கட்சிகள் பின்னணியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்த தகவல் வந்தவுடன் தான் ரஜினி தான் சுதாரித்து உடனடியாக ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி ’அண்ணாத்த’ திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் ஆகவில்லை என சன் பிக்சர்ஸ் நிறுவனம் கவலையில் உள்ளதாகவும், இதனை அடுத்து தனக்கு ரசிகர்கள் பலம் இன்னமும் இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காக தான் அவர் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் என்றும் அவர் எதிர்பார்த்தது போலவே தற்போது மீண்டும் ரசிகர்கள் உற்சாகமாக செயல்பட தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ’அண்ணாத்த’ படத்தின் புரமோஷனை அவர் விரைவில் செய்யப்போவதாகவும் ’அண்ணாத்த’ திரைப்படம் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் வியாபாரம் செய்ய வைக்க தான் பொறுப்பு என்று தயாரிப்பாளர் தரப்பில் ரஜினிகாந்த் தரப்பு உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version