தமிழ்நாடு

ராஜகண்ணப்பன் மாற்றத்திற்கு இந்த மூன்று காரணங்களா?

Published

on

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீரென அந்த அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

இந்த நிலையில் வைத்திருக்க முக்கிய மூன்று முக்கிய காரணங்கள் என்று கூறப்படுகிறது. முதலாவதாக சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் என்பவர் தான் காரணம் என்று கூறப்படுகிறது .

ராஜகண்ணப்பன் தன்னை சாதிய வன்மத்தோடு திட்டியதாகவும் அதனால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த பேட்டி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இரண்டாவதாக கடந்த ஆண்டு ராஜகண்ணப்பனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூற வந்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு பிளாஸ்டிக் சேர் மட்டுமே கொடுத்து அவமதித்ததாக புகைப்படங்களுடன் கூடிய செய்தி வெளியானது.

மூன்றாவதாக ராஜ கண்ணப்பனின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை போக்குவரத்து துறை ஆணையர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 35 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் அந்தத் துறையின் அமைச்சர் ராஜகண்ணப்பன் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேற்கண்ட மூன்று காரணங்களால் தான் ராஜகண்ணப்பன் பாதிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

 

seithichurul

Trending

Exit mobile version