தமிழ்நாடு

புதுவையில் இந்திய ஒன்றியம் என அமைச்சர்கள் பதவியேற்றது ஏன்? நெட்டிசன்கள் விளக்கம்!

Published

on

ஒன்றிய அரசு என்ற வார்த்தைக்கு தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் புதுச்சேரியில் அக்கட்சி அமைச்சர்களே இந்திய ஒன்றியம் என்று கூறி பதவி ஏற்றது குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பதிலளிக்க மறுத்துவிட்டதாக திமுக ஆதரவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு இந்திய அரசை மத்திய அரசு என்று குறிப்பிடுவதற்கு பதில் ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு வருகிறது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் புதுச்சேரியில் அக்கட்சியை சேர்ந்த அமைச்சர்களே இந்திய ஒன்றியத்தின் ஆட்சிப் பரப்பு என்று கூறி பதவி ஏற்றுக்கொண்டனர். தமிழக முன்னாள் பாஜக தலைவரும் தற்போதைய புதுச்சேரி துணைநிலை ஆளுநரும் ஆன தமிழிசையும் இந்திய ஒன்றியம் என்று கூறி பதவி பிரமாணம் செய்து வைத்தார்

ஒன்றிய அரசு என்ற வார்த்தையை தமிழ்நாட்டில் பாஜக எதிர்க்கும் போது புதுச்சேரியில் மட்டும் அதனை பயன்படுத்துவது ஏன் என்ற அக்கட்சியின் மாநில தலைவர் எல் முருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது இதுகுறித்து பின்னர் பதில் சொல்கிறேன்’ என்று கூறினார்.

இந்த நிலையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் எல்.முருகன் நழுவதாக திமுகவின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. உண்மையில் புதுச்சேரி என்பது யூனியன் பிரதேசம் என்பதால் அங்கு அமைச்சர்கள் இந்திய ஒன்றியத்தின் பரப்பு என்று பதவியேற்று கொண்டனர் என்றும், அவர்கள் திமுகவினர் போல் பிரிவினைவாத நோக்கத்தில் ஒன்றியம் என்ற வார்த்தையை சொல்லவில்லை என்றும் இந்த செய்திக்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version