சினிமா செய்திகள்

நடிகர் பார்த்திபன் ஓட்டு போடாததற்கு இதுதான் காரணமாம்! வைரலாகும் டுவிட்

Published

on

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் நேற்று முன்தினம் அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு டுவிட் ஒன்றை பதிவு செய்துவிட்டு நேற்று அவரே வாக்களிக்காமல் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நேற்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் கிட்டத்தட்ட அனைத்து திரையுலக பிரபலங்களும் வாக்களித்து விட்டனர். ஆனால் நடிகர் மற்றும் இயக்குனர் நேற்று பார்த்திபன் நேற்று வாக்களிக்கவில்லை. இது குறித்து விளக்கமளித்து நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது

வணக்கமும் நன்றியும்! ஜனநாயக கடமையை சீராக செய்த சிறப்பானவர்களுக்கு!
வருத்தமும், இயலாமையும்.

இரண்டாம் தவனை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் முழுவதும் வீங்கிவிட்டது. டாக்டருக்குக் போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துக்கொண்டேன்.

எனவே தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற reactions. அதுவும் எனக்கு ஏற்கனவே allergy issues இருந்ததால் மட்டுமே trigger ஆனது. என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில்.

https://twitter.com/rparthiepan/status/1379624673197977600

https://twitter.com/rparthiepan/status/1379629200877883394

 

seithichurul

Trending

Exit mobile version