சினிமா செய்திகள்

மாஸ்டர் படத்தை அவசர கதியில் அமேசான் ப்ரைம்-ல் வெளியிடுவது ஏன்?

Published

on

நடிகர்கள் விஜய்- விஜய் சேதுபதி ஆகியோரது நடிப்பில் உருவாகி கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் மாஸ்டர்.

மாஸ்டர் திரைப்படம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் தமிழில் வெளியான முதல் பெரிய பட்ஜெட் படம் ஆகும். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு நடுவே ஓராண்டு கால காத்திருப்புக்குப் பின்னர் வெளியான படம். வசூல் ரீதியாக அள்ளிக் குவித்து வரும் மாஸ்டர் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்த சூழலில் அமேசான் ப்ரைம் தளத்தில் மாஸ்டர் திரைப்படம் வருகிற ஜனவரி 29-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் திரை அரங்கங்களில் வெளியாகி இன்னும் 15 நாட்கள் கூட ஆகாத நிலையில் அதற்குள் எதற்காக மாஸ்டர் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என கேள்வ்வி எழத் தொடங்கியது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக உலகம் எங்கும் வெளியாக வேண்டியதாக இருந்த மாஸ்டர் படம் தமிழகத்தில் மட்டும் வெளியானது. ஆனால், உலகின் மற்ற நாடுகளில் உள்ள தமிழ் மக்களும் மாஸ்டர் படத்தை பார்க்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே ஓடிடி தளத்தில் மாஸ்டர் படத்தை வெளியிடுவதாக படக்குழுவினர் விளக்கம் கொடுத்துள்ளனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version