உலகம்

டுவிட்டரில் இருந்து விலகிய ஜேக் டார்சியின் அடுத்த திட்டம் என்ன? இதுதான் மாஸ்டர் பிளானா?

Published

on

டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த ஜேக் டார்சி திடீரென பதவி விலகினார் என்பதும் அதனை அடுத்து இந்தியரான பராக் அக்ரவால் என்பவர் ட்விட்டர் சிஇஓவாக பதவி ஏற்றார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

ஆனால் டுவிட்டர் சிஇஓவாக இருந்த ஜேக் டார்சி எதனால் பதவி விலகினார் அவருடைய அடுத்தகட்ட திட்டம் என்ன என்பது குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

கடந்து 2015ஆம் ஆண்டு ஏற்கனவே ஒருமுறை டுவிட்டர் சிஇஓ பதவியிலிருந்து ஜேக் டார்சி விலகினார் என்பதும் அதனை அடுத்து அவர் ஸ்கொயர் என்னும் புதிய நிறுவனத்தை ஆரம்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் டுவிட்டரில் இருந்து விலகி உள்ள ஜேக் டார்சி பிட்காயின் பிசினஸில் இறங்கப் போவதாக கூறப்படுகிறது. பிட்காயினுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதால் அவர் பிட்காயின் குறித்த ஆய்வில் ஈடுபடுவார் என்றும் அவரது அடுத்த இலக்கு பிட்காயின் பிசினசை விரிவாக்குவதுதான் என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஸ்கொயர் என்ற நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் ஜேக் டார்சி, அடுத்து பிட்காயின் நிறுவனத்தில் சேர்ந்து அது குறித்து ஆய்வில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version