இந்தியா

எனது மகள் குறித்து பேச வேண்டாம்: அல்கொய்தா தலைவருக்கு ஹிஜாப் மாணவியின் தந்தை வேண்டுகோள்

Published

on

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் பிரச்சனை நடந்தபோது ஆவேசமாக கோஷமிட்ட கல்லூரி மாணவியை பாராட்டி அல்கொய்தா தலைவர் பேசிய நிலையில் எனது மகள் குறித்து பேச வேண்டாம் என அல்கொய்தா தலைவருக்கு மாணவியின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹிஜாப் போராட்டம் நடைபெற்றபோது கல்லூரி மாணவி ஒருவர் தனி ஒருவராக ஹிஜாப்புக்கு ஆதரவாக கோஷமிட்டார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானது என்பதும் அந்த மாணவியின் துணிச்சலுக்கு பாராட்டு குவிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஹிஜாப் போராட்டத்தில் துணிச்சலாக கோஷமிட்ட மாணவிக்கு அல்கொய்தா தலைவர் வீடியோ மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார். 9 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் முழுக்க முழுக்க மாணவியின் துணிச்சலை பற்றியே பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அல்கொய்தா தலைவர் பாராட்டியதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து மாணவியின் தந்தை வேண்டுகோள் விடுத்தார். அல்கொய்தாவுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்புமில்லை என்றும் தாங்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் அல்கொய்தா தலைவர் பாராட்டால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்

தனது மகளின் படம் தீவிரவாதிகளின் சுவரொட்டியில் இடம்பெறுவதை விரும்பவில்லை என்றும் அல்கொய்தா இந்த பிரச்சினையை தூண்டி மோதல்களை அதிகப்படுத்த முயற்சிக்க வேண்டாம் என்றும் அல்கொய்தா தலைவருக்கு கல்லூரி மாணவியின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்

 

seithichurul

Trending

Exit mobile version