தமிழ்நாடு

ராகுல் பெயரை கொல்கத்தா கூட்டத்தில் முன்மொழியாதது ஏன்?.. ஸ்டாலின் விளக்கம் இதுதான்!

Published

on

சென்னை: மேற்கு வங்கத்தில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை ஏன் பிரதமர் வேட்பாளராக முன்மொழியவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் நடந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவின் போது நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார்.

இந்த நிலையில் இதேபோல் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜியின் அழைப்பின் பேரில் கொல்கத்தாவில் பெரிய எதிர்க்கட்சிகளின் மாநாடு நடைபெற்றது. இது மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

ஆனால் நேற்று நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஸ்டாலின் , ராகுல் காந்தி குறித்து பேசவில்லை. ராகுல் காந்தியின் பெயரை ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக முன்மொழியவில்லை. ஸ்டாலின் ஏன் ராகுல் காந்தியின் பெயரை முன்மொழியவில்லை என்பது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version