தமிழ்நாடு

நிதின் கட்கரி சொன்னபோது முதல்வர் ஏன் அமைதியாக இருந்தார்: தினகரன் கேள்வி!

Published

on

சேலத்திலிருந்து சென்னைக்கு எட்டுவழிச்சாலை அமைக்கப்படும் திட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியபோது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏன் அமைதியாக இருந்தார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடகாவில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது மேகதாட்டு அணை கட்டப்படும் எனவும் காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் எனவும் பேசியதாக தமிழக சட்டசபையில் குற்றம் சாட்டினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அது உண்மையில்லை, அப்பட்டமான பொய் என கூறியுள்ளார் டிடிவி தினகரன்.

ராகுல் காந்தி அவ்வாறு பேசிவில்லை. கர்நாடக அமைச்சர் ஒருவர் தான் ராகுல் இருந்த மேடையில் மேக தாட்டு அணை கட்டப்படும் என கூறினார் என சுட்டிக்காட்டிய டிடிவி தினகரன் எட்டு வழிச்சாலை குறித்து தொடர்ந்து பேசினார். அதில், எட்டுவழிச் சாலை அமைக்கப்படும் என்று நிதின் கட்கரி சொன்னபோது முதல்வர், பாமக நிறுவனர் ஆகியோர் அமைதியாகத்தான் இருந்தனர். அப்போது மக்கள் எண்ணத்திற்கு மாறாக நடக்கமாட்டோம் என்று கூறிவிட்டு தேர்தல் முடிந்த பிறகு அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று கூறுகிறார் என விமர்சித்துள்ளார் தினகரன்.

seithichurul

Trending

Exit mobile version