கிரிக்கெட்

அஸ்வின் செய்த தப்பு என்ன? பிசிசிஐ எடுத்த ஷாக் முடிவு.. ரோஹித்திற்கு அப்படி என்னதான் கோபம்?

Published

on

இந்தூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் துணை கேப்டன் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் இந்த முடிவிற்கு பின் என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று நடக்கிறது. இந்தூரில் நடக்கும் இந்த போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இன்று இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேட்ச்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத் (வி.கே), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகிய வீரர்கள் ஆடுகின்றனர்.

தொடக்கத்தில் இருந்து இந்த ஆட்டத்தில் இந்திய அணி திணறி வருகிறது. முதலில் இறங்கிய ரோஹித் சர்மா வெறும் 12 ரன்களில் அவுட் ஆனார். தேவையின்றி இறங்கி வந்து ஆட முயன்று அவுட் ஆனார். அவரை தொடர்ந்து கில், புஜாரா, ஜடேஜா, ஷ்ரேயாஸ் ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

இந்த போட்டியில் இந்திய அணியில் துணை கேப்டன் இல்லை. துணை கேப்டனாக இருந்த கே எல் ராகுல் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதோடு அணியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுவிட்டார். இந்த நிலையில் அஸ்வின் துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. அஸ்வின்தான் டெஸ்ட் போட்டியில் அனுபவம் கொண்டவர்.

ரோஹித் சர்மாவை விட அஸ்வின் அதிக அனுபவம் கொண்டவர். இதையடுத்து அஸ்வின் துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை ரோஹித் துணை கேப்டனாக நியமிக்கவில்லை. அதேபோல் ஜடேஜாவும் இந்த லிஸ்டில் இருந்தார். ஆனால் அவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அஸ்வினை துணை கேப்டனாக போடுவதற்கு.. துணை கேப்டன் இல்லாமலே ஆடுவேன் என்று ரோஹித் சர்மா எடுத்த முடிவு கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

அதிக அனுபவம் கொண்ட அஸ்வினை பிசிசிஐ புறக்கணித்தது ஏன்.. ரோஹித் சர்மா இவரை தொடர்ந்து ஓரம் கட்டுவது ஏன் என்று கேள்விகள் கடுமையாக எழுந்து உள்ளன.

author avatar
seithichurul

Trending

Exit mobile version