தமிழ்நாடு

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலக பாமக காரணமா?

Published

on

அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று திடீரென அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியது. தேமுதிக தனித்து போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலக என்ன காரணம் என்பது குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

பொதுவாக ஒரு கூட்டணியில் ஒரு அரசியல் கட்சி தங்களுக்கு தொகுதிகளை ஒதுக்கும்படி கோரிக்கை விடும்போது தங்களுடைய வாக்கு வங்கி இவ்வளவு, தங்களுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு இவ்வளவு என்பதை கூறி தான் தொகுதிகள் கேட்கும். ஆனால் தேமுதிக மட்டும் மற்ற கட்சிகளோடு தங்களுடைய கட்சியை ஒப்பிட்டு தொகுதிகள் கேட்டதாகவும், குறிப்பாக பாமகவுக்கு கொடுத்த எண்ணிக்கையில் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் தேமுதிகவின் கோரிக்கையாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.

அதிமுக தரப்பில் இருந்து பாமக மற்றும் தேமுதிக ஆகிய இரு கட்சிகள் வாங்கிய வாக்கு வங்கியின் சதவிகிதத்தை ஒப்பிட்டதையும் தேமுதிக விரும்பவில்லையாம். பாமகவுக்கு கொடுத்த எண்ணிக்கையை தங்களுக்கும் வேண்டும் என்று கடைசிவரை அடம் பிடித்ததால் தான் தேமுதிகவை அதிமுக கைகழுவிவிட்டதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகளே கூட்டணி கட்சியை அனுசரித்து அவர்கள் கொடுக்கும் தொகுதியை வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த பாராளுமன்ற தேர்தலில் 2% மட்டுமே வாக்குகள் வாங்கிய தேமுதிக அவசரப்பட்டு அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version