தமிழ்நாடு

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டை தகரம் வைத்து அடைப்பது ஏன்?

Published

on

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டை, தகரம் வைத்து அடைப்பதன் காரணம் என்ன சென்னை மாநகராட்சியிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கோவிட்-19 தொற்று அறிகுறி இல்லாதவர்களைச் சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடிப்பதற்கான காரணம் என்ன?

எந்த விதிமுறைகளின் அடிப்படையில் வீடுகளில் தகரம் அடிக்கப்படுகிறது? என்று சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசு வரும் 19-ம் தேதி பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version