இந்தியா

கேரளாவில் கொரோனா அதிகரிப்புக்கு காரணம் இதுவா? அதிர்ச்சி தகவல்!

Published

on

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருக்கும் நிலையில் கேரளாவில் மட்டும் பாதிப்பு அதிகரிப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

சமீபத்தில் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகை காரணமாக அங்கு கொரோனா பரிசோதனை செய்வது மற்றும் தடுப்பூசி போடுவதில் ஏற்பட்ட சுணக்கமே கொரோனா நோய் தொற்று அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது. அதேபோல் ரம்ஜான் மற்றும் மொஹரம் பண்டிகையின்போது கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டது மிகப்பெரிய தவறு என்றும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

கேரள அரசின் பொறுப்பற்ற இந்த செயல்களால் தான் தற்போது கேரளாவில் மிக அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கேரளாவில் கடந்த மே மாதம் அதிகபட்சமாக 30 ஆயிரத்து 490 பேருக்கு கொரோனா பரவியது. ஆனால் தற்போது அதைவிட அதிகமாக 31 ஆயிரத்து 445 பேர் நேற்று கேரளாவில்வால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி 24 மணிநேரத்தில் 215 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இனிமேலாவது கேரள மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக இருக்கிறது. கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை அடுத்து தமிழகம் உள்பட அண்டை மாநிலங்கள் கேரளாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version