சினிமா செய்திகள்

அஸ்வின் மீது வெறுப்பு ஏற்பட இதுதான் காரணமா?

Published

on

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அஸ்வின் மீது வெறுப்பு ஏற்பட இதுதான் காரணம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு முன்னர் அஸ்வினை கிட்டத்தட்ட யாருக்குமே தெரியாது. ஒரு சில சீரியல்களில் அவர் நடித்து இருந்தாலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவரைப் பற்றி எந்த ஒரு ரசிகருக்கும் தெரியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவரை மிகப் பெரிய இடத்திற்கு கொண்டு போய் விட்டது என்பதும் அவர் வெளியே வந்தாலே பெண்கள் கூட்டம் அவரைச் சுற்றி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி அவருக்கு ஒரே நிறுவனத்தில் மூன்று படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்தை அடைந்ததால் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் மற்றும் அந்த நடிகரை சார்ந்தவர்கள் அஸ்வின் மீது பொறாமை கொண்ட கோபம் கொண்டதாக தெரிகிறது. இதனை அடுத்தே வேண்டுமென்றே அஸ்வின் மீது பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் ஒரு சிலர் யூடியுப் வீடியோக்களில் அவரைப் பற்றிய வதந்திகளை கிளப்பி வந்தனர்.

இந்த நிலையில் அஸ்வின் நடித்து வரும் ’என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஸ்வின் காமெடியாக பேசினதை சீரியசாக எடுத்துக்கொண்டு ஒரு சில நடிகர்களின் ஐடி விங்குகள் அவரை வேண்டுமென்றே ட்ரோல் செய்து வந்தனர். அஸ்வின் மீது ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை உண்டாக்க வேண்டும் என்ற டார்கெட் அவர்களுக்கு கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதையும் தாண்டி தற்போது ரசிகர்கள் அவர் நடித்துள்ள ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் எது காத்திருக்கின்றனர் என்பதும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலகின் மாஸ் நடிகர்கள் அனைவருமே திரை உலகில் மிகவும் கஷ்டப்பட்டு பல ஆண்டுகளாக உழைத்து சம்பாதித்த பெயரை ஒரே ஒரு நிகழ்ச்சியின் மூலம் அஸ்வின் பெற்று விட்டாரே என்ற பொறாமை கலந்த ஆத்திரம் தான் அவர் மீதான வெறுப்புக்கு காரணம் என டுவிட்டரில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version